8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி

By செய்திப்பிரிவு

சென்னை: கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படம், 'ஒத்த ஓட்டு முத்தையா'. சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சாய் ராஜகோபால் எழுதி இயக்கியுள்ளார். இதில், யோகிபாபு, ராஜேஸ்வரி, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமி மகன் அன்பு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், “அரசியல் கலந்த நகைச்சுவை படம் வெளியாகி வருடங்களாகிவிட்டன. அந்தக் குறையை இந்தப் படம் போக்கும். ஆறு முதல் 60 வயதுவரை அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும். அரசியல் நையாண்டிக்கும் பஞ்சமிருக்காது. கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்திருக்கிறது. படத்தின் டப்பிங்கை எட்டு மணி நேரம் தொடர்ந்து பேசியுள்ளார் கவுண்டமணி” என்றார். விரைவில் படம் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்