மாரடைப்பு காரணமாக நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி 

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் வெளியான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் சேஷு. இதனாலே இவரை ‘லொள்ளு சபா’ சேஷு என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து அவர் சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மாரடைப்புக் காரணமாக நடிகர் சேஷு அனுமதிக்கபட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்