சென்னை: கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'ஜோ' படத்தில், ரியோ ராஜின் நண்பராக நடித்து பாராட்டு பெற்றவர் ஏகன். இவர், சீனு ராமசாமி இயக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் நாயகனாக நடிக்கிறார். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் டாக்டர் டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் தயாரிக்கின்றனர். யோகி பாபு, பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதில் நடிப்பது குறித்து ஏகன் கூறும்போது, “சில படங்களில் நாயகனுக்கு நண்பராக நடித்தேன். இந்தப் படம் மூலம் நாயகனாகி இருக்கிறேன். இதில் யோகி பாபு உள்ளிட்டவர்களுடன் நடித்தது வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. இதன் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அது அறுவைச் சிகிச்சை வரை செல்லும் என்று நான் நினைக்கவில்லை. இப்போது குணமடைந்துவிட்டேன். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இன்னும் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago