‘கொரோனா குமார்’ படத்தில் விஷ்ணு விஷாலா? - இயக்குநர் தரப்பு மறுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஜீவா நடித்த ‘ரவுத்திரம்’, விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, ஆர்ஜே பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ உட்பட சில படங்களை இயக்கியவர் கோகுல். இவர் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் என்ற பெயரில் இயக்க இருந்தார்.

அந்தப் படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா குமார் கதையில் விஷ்ணு விஷால் நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின.

இதுபற்றி இயக்குநர் கோகுல் தரப்பில் விசாரித்தபோது, அதை மறுத்தனர். ‘கட்டா குஸ்தி’ படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் படத்தை கோகுல் இயக்க இருக்கிறார். ஆக்‌ஷன் என்டர்டெயினர் படமான இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கும் கொரோனா குமார் படத்துக்கும் சம்மந்தமில்லை என்று இயக்குநர் தரப்பில் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்