சென்னை: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. பின்னர் கமல்ஹாசன் சொந்த வேலை காரணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்தப் படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக துல்கர் சல்மானின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “ஆம். செய்தி உண்மைதான். படத்திலிருந்து துல்கர் விலகிவிட்டார்.
அவரது மற்ற படப்பிடிப்பு தேதிகளுடன் இப்படத்தின் ஷெட்யூல் ஒரே நேரத்தில் வர இருப்பதால் தேதிகள் ஒதுக்க முடியாத காரணத்தால் துல்கர் சல்மான் படத்திலிருந்து விலகிவிட்டார்” என தெரிவித்துள்ளார். ‘சூர்யா 43’, ‘காந்தா’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களில் துல்கர் சல்மானின் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago