சென்னை: பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, நடிகர் விக்ரமின் 62-வது படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.
மலையாள சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சுராஜ் வெஞ்சரமூடு. சுமார் 250 படங்களில் நடித்துள்ள அவர், குணசித்திரம், கதாநாயகன் உட்பட பல வேடங்களில் நடித்துள்ளார். ‘பேரரறியாதவர்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர்.
இவர், நடிப்பில் வெளியான, ‘டிரைவிங் லைசன்ஸ்’, ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’உட்பட சில படங்கள் மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றன. இவர், இப்போது தமிழுக்கு வருகிறார்.
‘சித்தா’ இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். விக்ரமின் 62 வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் சுராஜ் வெஞ்சரமூடு இணைந்துள்ளார். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்க இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago