சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட பல படங்கள் மீண்டும் வெளியிடப் பட்டன.
இந்நிலையில், நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில், அஜித் குமார், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘வாலி’ படமும் டிஜிட்டலில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. 1999-ம் ஆண்டு வந்த இந்தப் படத்தின் மூலம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் ஆனார். சிக்கலான கதையை, சிறப்பான திரைக்கதையால் அசத்தல் திரில்லராக தந்திருந்தார் அவர். அஜித் இரு வேடங்களில் நடித்திருந்திருந்தார். அவர் நடித்த வாய்ப்பேச முடியாத அண்ணன் பாத்திரம் அப்போது பேசப்பட்டது.
பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இந்தப் படம் 24 வருடங்களுக்குப் பிறகு, தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நந்தினி தேவி பிலிம்ஸ் சார்பில் கே. கிருஷ்ணன் இதை வெளியிட்டுள்ளார். இந்தப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago