மறுவெளியீட்டில் சாதிக்கும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’

By செய்திப்பிரிவு

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா உட்பட பலர் நடித்த படம், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்தப் படம், 2010-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி வெளியானது. இதில் நாக சைதன்யாவும் சமந்தாவும் கவுரவ வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் உருவானது. இந்தப்படம் மூலம் அறிமுகமானார் சமந்தா. இதையடுத்து சினிமாவுக்கு வந்து 14 வருடம் ஆனதை ஒட்டி சமந்தாவுக்கு நயன்தாரா உட்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் சென்னை, அண்ணாநகர் பிவிஆர் திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது. மறுவெளியீட்டில் 750 நாட்களுக்கு மேலாக ஓடி கொண்டு இருப்பதாகக் கூறி சிலம்பரசன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதுபற்றி பிவிஆர் தரப்பில் கேட்டபோது, “இந்தப் படம் மறுவெளியீட்டில் இரண்டரை வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்