சென்னை: இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன், தமிழ், மலையாளம், இந்திப் படங்களில் பணியாற்றி வருகிறார். தமிழில், தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன், துப்பாக்கி உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். உருமி உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவருக்கு, இப்போது பியர் ஆஞ்சனியூஸ் (Pierre Angenieux) என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் திறமையான, ஒட்டுமொத்த ஒளிப்பதிவு பங்களிப்புக்காக வழங்கப்படும் விருது, இது. இந்த விருதை பெறும் முதல் இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. மே 24-ம் தேதி பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை இதற்கு முன், புகழ்பெற்ற பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் பிலிம் ரூஸலாட், அமெரிக்க ஒளிப்பதிவாளர் வில்மோஸ் சிக்மண்ட் , ரோஜர் , கிறிஸ்டோபர் டாய்ல் உட்பட பலர் பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago