“அரசியல் பேச விரும்பவில்லை” - சசிகலாவை சந்தித்த ரஜினிகாந்த் 

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று சசிகலாவை அவரது புதிய இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் பேச விரும்பவில்லை” என தெரிவித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே.சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த பங்களாவுக்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. இதில் கலந்த கொள்ள முடியாத சூழலில் இன்று (பிப்.24) நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோயில் போல உள்ளது. இந்த வீடு அவர்களுக்கு பெயர், புகழ், சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார். அவரிடம், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அரசியல் பேச விரும்பவில்லை” என முடித்துகொண்டார் ரஜினி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

56 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்