“குக் வித் கோமாளி 5வது சீசனில் நான் இல்லை” - செஃப் வெங்கடேஷ் பட் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ தொடரின் 5-வது சீசனில் தான் பங்கேற்வில்லை என நிகழ்ச்சியின் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “குக் வித் கோமாளியின் புதிய சீசன் தொடங்குவது குறித்து கடந்த சில மாதங்களாக ஊகங்கள் நிலவி வருகின்றன. சீசன் 5-ல் நான் நடுவராக தொடர்வேன் என சமூக வலைதளங்களில் கணிப்புகள் வலம் வருகின்றன. புதிய சீசனில் நான் பங்கேற்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தும் வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்கிறேன்.

என்னையும் சேர்த்து பல லட்சம் பேரை மகிழ்விக்கும் அந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து ப்ரேக் எடுத்துக்கொள்கிறேன். குக் வித் கோமாளி என்னுடைய ஜாலியான பக்கத்தைக் காட்டியது. மேலும் நான் நானாக இருக்க வசதியை ஏற்படுத்தி தந்தது. 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, மற்ற வாய்ப்புகளை நோக்கிச் செல்ல முடிவு செய்துள்ளேன். நிகழ்ச்சியின் இயக்குநர் உள்ளிட்டோருக்கு நன்றி.

மன அழுத்தத்தில் இருக்கும் பலருக்கும் அவர்களின் மன அழுத்ததை குறைக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. இந்த முடிவு ஒரு கடிமான முடிவாக இருந்தாலும், அதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் வரவிருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அது குறித்து யூகித்துக்கொண்டிருங்கள். நன்றி” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்