சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் சூர்யா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதுகுறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ‘கங்குவா’ படத்தில் சூர்யாவுக்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
3டியில் உருவாகும் ‘கங்குவா’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்னால் வெளியாகி வரவேற்பை பெற்றது.
» “அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்” - த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள்
» கவின் நடிப்பில் ‘கலகலப்பு 3’? - வதந்திக்கு சுந்தர்.சி தரப்பு மறுப்பு
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago