இளசுகள் கொண்டாடும் ‘ஷோ டைம்’!

By வா.ரவிக்குமார்

சென்னையைச் சேர்ந்த மிஸஸ்.கோ மற்றும் டெப்பி பாரி (Debbie Pari) இணைந்து பாடியிருக்கும் `ஷோ டைம்' என்னும் ராப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. டெப்பி பாரி தற்போது கனடாவில் பணிபுரிந்துகொண்டே உயர் கல்வி படிக்கிறார்.

“திரைப்பட இசையை மக்கள் கொண்டாடட்டும். அதே நேரம், எங்களைப் போன்ற சொல்லிசைக் கலைஞர்களையும் கொண்டாடுங்கள் என்னும் கோரிக்கையை இந்தப் பாடல் வழியாக வைக்கிறோம்" என்னும் மிஸஸ். கோ, சென்னையில் உள்ள பெத்தேல் நகரில் வாழும் மக்களின் பிரச்சினையை `ராப்' வடிவில் பாடியவர். தொடர்ந்து இவர் வெளியிட்ட `ரக்கட் கேர்ள்' பாடலும் தனித்துவமான பெண்ணை அடையாளப்படுத்தியது.

இந்தப் பாடலிலும், திருமணமோ, குழந்தை பிறப்போ ஒரு பெண்ணின் திறமையைக் கட்டுப்படுத்தும் தடைகள் இல்லை என்பதை மிஸஸ். கோ அழுத்தமாகச் சொல்கிறார். மக்களை உற்சாகப்படுத்துவதையும் சந்தோஷப்படுத்துவதையும் மட்டுமே கலையின் நோக்கமாக ஒரு கலைஞன் நினைக்கக் கூடாது. அதில் மக்களுக்கான குரலும் ஒலிக்கவேண்டும் என்னும் கருத்து டெப்பி பாரியின் வரிகளில் வெளிப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE