நடிகர் இளவரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு @ உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நிதி முறைகேடு புகார் மீது உரிய விசாரணை நடத்தவில்லை என காவல் துறையினருக்கு எதிராக நடிகர் இளவரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் ஊழியர்கள் 40 லட்ச ரூபாய் அளவுக்கு நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த புகார் பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை முடிக்கவில்லை எனக் கூறி காவல் துறையினர் மீது ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் முன்னாள் செயலாளரும், நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மன்னிப்புக் கோரி பாண்டிபஜார் காவல் நிலையத்தின் 5 காவல் ஆய்வாளர்களில் 3 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். மருத்துவ விடுப்பில் சென்றிருந்ததாக கூறியிருந்த இரு ஆய்வாளர்களும் மருத்துவச் சான்றிதழை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி அந்த இரண்டு ஆய்வாளர்களின் மருத்துவச் சான்றிதழை தாக்கல் செய்தார்.

மேலும், இந்தப் புகாரின் தீவிர தன்மையை உணர்ந்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த விசாரணையை உதவி ஆணையர் மீண்டும் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தார்.

காவல் துறையின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை முடித்து, அதன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் நடிகர் இளவரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்