தமிழுக்கு வருகிறார் மலையாள இயக்குநர் அஞ்சலி மேனன் 

By செய்திப்பிரிவு

சென்னை: ‘பெங்களூரு டேஸ்’ (Bangalore Days) உள்ளிட்ட மலையாள படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஞ்சலி மேனன் தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘மஞ்சாடிக்குரு’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கூடே’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென மலையாள சினிமாவில் தனி ரசிகர்களைப் பெற்ற இயக்குநர் அஞ்சலி மேனன். கடைசியாக அவர் பார்வதி, நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்த ‘ஒண்டர் உமன்’ (wonder women) படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில், அவர் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை கேஆர்ஜி ஸ்டூடியோஸ் (KRG Studios) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படங்களை விநியோகிக்கும் இந்நிறுவனம் தற்போது இப்படத்தின் மூலம் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இது தொடர்பானக அந்நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காதல் மற்றும் வாழ்க்கை பற்றிய கதையுடன் அஞ்சலி மேனன் தமிழ் சினிமாவில் நுழைகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விவரங்கள் எதையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்