'ஜாம் ஜாம்' மூலம் இயக்குநர் ஆன யூடியூபர் அபிஷேக் ராஜா

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம், ஜாம் ஜாம். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி அபிஷேக் ராஜாவிடம் கேட்டபோது ‘‘காதலிப்பது, காதலை அணுகுவதற்கு பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன. அதில் ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் சொல்கிறோம். ஒரு கல்யாணத்தில் நடக்கிற கலாட்டாவான விஷயங்கள்தான் படம்.

அதை எவ்வளவு பொழுதுபோக்காகச் சொல்ல முடியுமோ அப்படி சொல்கிறோம். வழக்கமான ரொமான்டிக் காமெடி படமாக இது இருக்காது. த்ரில்லிங் விஷயங்களும் இருக்கும். நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை என்றாலும் முன்னணி நடிகர்கள் பங்கேற்ற சில விளம்பரப் படங்களை இயக்கி இருக்கிறேன். அந்த அனுபவத்தில் இந்தப் படத்தை இயக்குகிறேன். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் ” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE