சென்னை: புதுமுகங்கள், சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், சரண்யா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பைரி’. ஜாண் கிளாடி இயக்கியுள்ள இந்தப் படத்தை டி.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில்வி. துரைராஜ் தயாரித்துள்ளார். அருண்ராஜ் இசை அமைத்துள்ளார். வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் படத்தை வெளியிடுகிறார்.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் கிளாடி பேசும்போது, “புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம்தான் பைரி. புறா பந்தய கதைக்களப் பின்னணியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தில் 950 கிராபிக்ஸ் ஷாட்கள் இருக்கின்றன. 4 நிமிடத்துக்கு ரூ.75 லட்சம் செலவாகும் என்றார்கள். ஆனால் சிஜி சேகர், 35 நிமிடத்துக்கு கிராபிக்ஸ் ஷாட்களை குறைந்த பட்ஜெட்டில் வடிவமைத்துக் கொடுத்தார்” என்றார்.
சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது, “ இந்த ஆண்டுக்கான வெற்றிப்படங்கள் மற்றும் சிறந்த படங்கள் என்று பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக பைரி இருக்கும்” என்றார்
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago