சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ மற்றும் மணிகண்டனின் ‘லவ்வர்’ படங்கள் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இந்த வசூல் நிலவரங்கள் குறித்து பார்ப்போம்.
லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’. இதில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறினாலும், அவர்தான் மொத்தப் படத்தையும் தாங்குகிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. செந்தில், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா, லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா, கபில் தேவ் (சிறப்பு தோற்றம்) உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மத நல்லிணக்கத்தைப் பேசும் இப்படம் பலவீனமான திரைக்கதை உள்ளிட்ட அம்சங்களால் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படம் முதல் நாள் ரூ.3.55 கோடியும், இரண்டாவது நாள் ரூ.3.25 கோடியும், மூன்றாவது நாள் ரூ.3.30 கோடியும் என மொத்தமாக 3 நாட்களில் ரூ.10 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடி என கூறப்படுகிறது.
லவ்வர்: பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன்,ஸ்ரீகவுரி ப்ரியா நடித்துள்ள படம் ‘லவ்வர்’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் கண்ணா ரவி, கீதா கைலாசம், ஹரிஷ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
» சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே21’ டைட்டில் டீசர் அறிவிப்பு வீடியோ வெளியீடு!
» ரன்வீர் சிங் - ஜானி சின்ஸ் தோன்றும் புதிய விளம்பர வீடியோ வைரல்!
‘டாக்ஸிக்’ காதல் குறித்து பேசும் இப்படம் அதன் ஒரேமாதிரியான ரீபிடட் காட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. கலவையான விமர்சனங்கள் எழுந்த போதும் காதலர்களிடையே படம் கவனம் பெற்று வருகிறது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், முதல் மூன்று நாட்களில் ரூ.2.75 கோடிக்கும் அதிமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago