தனுஷ் - ஹெச்.வினோத் காம்போவில் புதிய படம்: ஜூனில் படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘வலிமை’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘துணிவு’ படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக கமல்ஹாசனை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ‘KH233’ என அழைக்கப்பட்ட இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும், அந்தப் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹெச்.வினோத் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது புது அப்டேட்டாக தனுஷவை வைத்து ஹெச்.வினோத் படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கியிருப்பதாகவும், ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

தனுஷை பொறுத்தவரை அவர் ‘D50’ படத்தை இயக்கி முடித்துவிட்டார். தற்போது சேகர் கமுலா இயக்கும் ‘D51’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஹெச்.வினோத்துடன் இணைவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்