தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது படக்குழு.
'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து, திரைப்பட விழாவுக்கான எடிட்டிங்கை முடித்து கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது படக்குழு.
விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில், இயக்குநர் மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ளார். பண மதிப்பு நீக்கப் பிரச்சினையால் இதன் படப்பிடிப்பு தடைபட்டு, தற்போது வேகமாக இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
யுவன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம், பி.எஸ்.வினோத், நீரவ்ஷா என 3 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்துள்ளார்கள். சில்பா என்ற திருநங்கையாக விஜய்சேதுபதி, வியம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா, பாதிரியார் வேடத்தில் மிஷ்கின் என இப்படம் குறித்த தகவல்கள் யாவுமே புதுமையாக இருப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago