“அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்” - நடிகர் ரஜினிகாந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்‌ஷனுக்கும், படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ’அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்‌ஷனுக்கும், படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். ‘வேட்டையன்’ படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 % மீதமுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளேன்” என்றார். விஜய், விஷால் அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ‘அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்றார்.

லால் சலாம் படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்