மீண்டும் தள்ளிப்போகிறதா தங்கலான்? 

By செய்திப்பிரிவு

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. இந்தப் படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு, இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்தனர். இந்நிலையில் ஏப்ரல் மாதமும் இந்தப் படம் ரிலீஸ் ஆவது சந்தேகம் என்கிறார்கள்.

போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இன்னும் இருப்பதாலும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதாலும் படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE