ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், லால் உட்பட பலர் நடித்து வெளியான படம், ‘சிங்கப்பூர் சலூன்’. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில், ஐசரி கணேஷ் தயாரித்த இந்தப் படத்தை கோகுல் இயக்கினார். இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் ஆர்ஜே பாலாஜி பேசும்போது கூறியதாவது: இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சாமி கதாபாத்திரத்தைப் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். இங்கு பேசிய சின்னி ஜெயந்த் சார், என்னை ’சவுத் இந்தியன் அமீர்கான்’ என சொன்னதும் பயம் வந்துவிட்டது. அவர் பெரிய லெஜெண்ட். அவருடன் என்னைஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம். எனது சிறந்த நடிப்பைக் வெளிக்கொண்டு வந்த இயக்குநர் கோகுலுக்கு நன்றி. ஐசரி கணேஷ் எனக்கு அப்பா போன்ற நெருங்கிய உறவும் அன்பும்கொண்டவர். 'எல்.கே.ஜி 2', ‘மூக்குத்தி அம்மன் 2’ போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன். ரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் பலருக்கு சிறு நம்பிக்கைத் தரும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ வந்திருப்பதில் மகிழ்ச்சி” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago