சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின்: “இந்திய ஜனநாயகத்தில் அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும். புதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்
சேரன்: “உங்கள் முயற்சி நல்ல எண்ணங்களுடைய சிந்தனையாளர்களின் துணையால் அவர்களின் திட்டமிடலால் எண்ணற்ற சிந்தனையாளர்களின் உழைப்பால் உயரட்டும்.. வாழ்த்துகள். "எண்ணித்துணிக கருமம்" என்பது போல் இதனை இதனால் இவன் செய்து முடிப்பான் என்றாய்ந்து" என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ்: “உங்கள் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துகள் நண்பா. இந்த புதிய பயணத்தில் உங்கள் வெற்றிக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
» எரியும் நெருப்பில் மிரட்டும் லுக் - சிம்புவின் ‘எஸ்டிஆர்48’ தோற்றம் எப்படி?
» லைகா - விஷால் இடையிலான பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு
சாந்தனு: “நீங்கள் பெரிய உயரத்தை அடையவும், ஒரு தலைவராக நீங்கள் தமிழகத்துக்கு என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதைச் சிறப்பாகச் செய்யவும் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
பாடலாசிரியர் விவேக்: “வாழ்த்துகள் பேரன்புமிக்க விஜய். #தவெக தமிழ் மக்கள் கையில் வாளாகவும் கேடயமாகவும் திகழும் என்ற நம்பிக்கையோடு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என பதிவிட்டுள்ளார்.
சிபி சத்யராஜ்: “அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு வாழ்த்துகள். ஒரு ரசிகனாக அவர் படங்களை பெரிய திரையில் பார்ப்பதை மிஸ் செய்வேன் என்றாலும், அவரைப் போன்ற தலைவர்கள் உலகிற்கு தேவை என்பதால் அவரது முடிவை நான் ஆதரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்தி சுப்பராஜ்: “அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துகள்” என எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் கோபிசந்த் மலினேனி, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லீ, நெல்சன் திலீப்குமார் நடிகர்கள் சதீஷ், ஹரீஷ் கல்யாண், உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago