எரியும் நெருப்பில் மிரட்டும் லுக் - சிம்புவின் ‘எஸ்டிஆர்48’ தோற்றம் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: சிம்பு பிறந்தநாளையொட்டி அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘எஸ்டிஆர்48’ படத்தின் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு ‘பத்து தல’ படத்துக்குப் பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் கைகோத்துள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

‘சிம்பு48’ என அழைக்கப்படும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. ஆனால், அதன்பிறகு எந்த அப்டேட்டும் இல்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவின. இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் தோற்றத்தை சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

போஸ்டர் எப்படி? - படம் பீரியட் டிராமா கதைக்களத்தில் உருவாகியிருப்பதை இந்த தோற்றம் உறுதி செய்கிறது. நீளமான தாடி, முடியுடன் கூடிய சிம்புவின் தோற்றமும் அவரது உடையும் கவனம் பெறுகிறது. குறிப்பாக சிம்புவின் உடையும், போஸ்டரில் இருக்கும் போர் படையும், படம் அரசர் கால வரலாற்று பின்னணியில் உருவாவதை உணர்த்துகிறது.

மேலும், சிம்புவின் இரண்டு தோற்றங்கள் மூலம் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. சுற்றிலும், நெருப்பு தெறிக்க போர்க்களக் காட்சிகளுடன் சிம்புவின் மிரட்டல் லுக் கொண்ட தோற்றம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்