‘கட்டா குஸ்தி’ இயக்குநருடன் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால்!

By செய்திப்பிரிவு

சென்னை: ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் எதிரொலியாக மீண்டும் அந்த இயக்குநருடன் நடிகர் விஷ்ணு விஷால் கைகோத்துள்ளார்.

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘கட்டா குஸ்தி’. இப்படத்தை விஷ்ணுவிஷாலும், ரவிதேஜாவும் இணைந்து தயாரித்திருந்தனர். ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கருணாஸ், முனிஷ்காந்த், காளிவெங்கட், ரெடின் கிங்ஸ் லீ உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். தமிழகத்தில் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை நெருங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவுடன் மீண்டும் கைகோத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இந்தப் படத்தையும் அவரே தயாரிக்கிறார். இப்படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

சினிமா

2 days ago

மேலும்