இன்னொரு மொழி கற்பது எனக்கு கஷ்டம் - விஜய் ஆண்டனி

By செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி, ரியா சுமன் ஜோடியாக நடித்துள்ள படம், ‘ஹிட்லர்’. கவுதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் தயாரித்துள்ளனர். ‘வானம் கொட்டட்டும்’ தனா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி கூறும்போது, “குறுகிய காலத்தில் ஒரு பெரிய படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் தனா. சிறப்பாக இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் நாயகி ரியா சுமன், அழகாகத் தமிழ் பேசுகிறார். எனக்கு இன்னொரு மொழி கற்றுக்கொள்வது கடினமானது. தெலுங்கில் எனக்கு ‘அந்தரிக்கி நமஸ்காரம்’ தவிர வேற எதுவும் தெரியாது. ஆனால், ரியா இவ்வளவு தெளிவாகத் தமிழ்ப் பேசுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் செருப்பு போடாமல் செல்வது பற்றி கேட்கிறார்கள். அதற்குக் காரணம் ஏதும் இல்லை. திடீரென்று செருப்பு போடத் தோன்றினால் போட்டுவிடுவேன். நான் நடிக்கும் படங்களில் கதைகள் சீரியஸாக இருப்பதால் ரொமான்டிக் காட்சிகள் அதிகம் கிடைப்பதில்லை. இந்தப் படத்திலும் அதே போல பெரிய பொறுப்பை இயக்குநர் கொடுத்திருக்கிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்