சென்னை: “உறுதுணைக் கதாபாத்திரமாக இல்லாமல் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் உங்களுடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும்” என்று சத்யராஜிடம் தனது விருப்பத்தை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியுள்ளார்.
கோகுல் இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேசிய நடிகர் விஜய் சேதுபதி மேடையில் அமர்ந்திருந்த சத்யராஜை நோக்கி, “உங்களுடன் இணைந்து பணியபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னை இன்ஸ்பிரேஷன் என நீங்கள் சொல்வது அநியாயம். அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் மிகச் சிறந்த நடிகர். நான் உங்களை அதிகமாக ரசித்திருக்கிறேன்.
சமீப காலமாகவே தொடர்ந்து உங்களது பழைய படங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் நடித்த ‘தெற்கு தெரு மச்சான்’,’ அமைதிப்படை’ உள்ளிட்ட சில படங்களை இப்போது வரைக்கும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுடைய காமெடி சென்ஸ், ரொமான்டிக் காட்சிகள், சண்டைக்காட்சிகள் அனைத்தையும் நான் மிகவும் ரசிப்பேன்.
டப்பிங் ஸ்டூடியோக்களுக்குச் செல்லும்போது சவுண்ட் இன்ஜினியர்களிடம் சிறந்த நடிகர் குறித்து கேட்பேன். எல்லோரும் உங்கள் பெயரைத்தான் சொல்வார்கள். கச்சிதமாக டப்பிங் பேசுவார் என பாராட்டுவார்கள். மேடைக்காக சொல்லவில்லை. உங்களுடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும் என ஆசை. சப்போர்ட்டிங் ரோல் இல்லாமல் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி” என்றார் விஜய் சேதுபதி.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago