சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான இதற்கு ‘வேட்டையன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (ஜன.15) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வழக்கமான போஸ்டர்களை போல இல்லாமல் ஓவியத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஓவியர் ராஜ்குமார் ஸ்தபதி வரைந்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
» “பிரதமர் மோடி அனைவராலும் மதிக்கப்படுபவர்” - மாலத்தீவு பயணத்தை ரத்து செய்த நாகார்ஜுனா
» விஜய்யின் ‘The GOAT’ படப்பிடிப்பு தள டைரீஸ்: வீடியோவை வெளியிட்ட படக்குழு
முக்கிய செய்திகள்
சினிமா
41 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago