“நிஜ கேங்ஸ்டர்களை சந்தித்தேன்” - ‘அசால்ட் சேது’ அனுபவம் பகிரும் பாபி சிம்ஹா

By செய்திப்பிரிவு

ஜிகர்தண்டா படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் பாபி சிம்ஹா சமீபத்தில் பிரசாந்த் நீலின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் ஏற்றிருந்த முக்கிய வேடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அவர் அளித்த பேட்டியில் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் முதல் சலார் வரை பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

'பான் இந்தியா' படங்கள் குறித்து பேசிய பாபி சிம்ஹா, "நடிகர்களுக்கு மொழி தடை என்பது இல்லை. 'பான் இந்தியா' படங்களால் சினிமா தொழில்துறை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. வேறு மொழிகளில் நடிகர்கள் நடிப்பது என்பது இப்போது நடப்பவை அல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. மக்கள் ஏற்றுக்கொண்டால் வரவேற்க வேண்டியதுதான். சினிமா தான் முக்கியம். சினிமாவில் மொழியை திணிக்காதீர்கள். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். அரசியலை அரசியலாக செய்யுங்கள். சினிமாவில் அரசியல் செய்ய வேண்டும்" என்று விரிவாக பேசினார்.

இதேபோல் தனது படங்கள் தொடர்பாக பேசிய பாபி சிம்ஹா, தான் நடித்த கேரக்டர்கள் மற்றும் தான் பணியாற்றிய இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், அல்போன்ஸ் புத்தரன், நலன் குமாரசாமி போன்றோர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

குறிப்பாக ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது கேரக்டருக்காக நிஜத்தில் சில கேங்ஸ்டர்களை சந்தித்ததை நினைவுகூர்ந்தார். "அசால்ட் சேது கேரக்டருக்காக சில கேங்ஸ்டர்களை நேரில் சந்தித்தோம். நிஜ ரவுடிகளின் சாயலில் தான் அசால்ட் சேது கேரக்டர் இருக்கும். கேரக்டரின் லுக்கில் இருந்து அனைத்தும் நிஜ ரவுடிகளின் ரெபரென்ஸ் தான். சிறைக்குச் சென்றவர்கள், குற்றங்கள் செய்தவர்களை ஆகியோரை சந்தித்து அவர்களின் மனநிலை வரை குறிப்பெடுத்தே அந்த கேரக்டரை திரையில் கொண்டுவந்தோம்.

அந்தப் படத்துக்காக மதுரை வட்டார மொழியை கற்றுக்கொள்வதற்காக நான்கு மாதங்கள் மதுரையில் தங்கியிருந்தேன். அந்த நாட்களில், தினமும் டீக்கடைகளில் உட்கார்வது, வெளி இடங்களுக்குச் செல்வது என சுற்றித்திரிந்து மதுரையின் வட்டார மொழியை கற்றுக்கொண்டேன். நான் கொடைக்கானலை சேர்ந்தவன் என்பதால் இயல்பிலேயே எனக்கு மதுரை வட்டார மொழி பழக்கமாக இருந்ததால் அது ஈசியாக இருந்தது" என்று தெரிவித்தார்.

இதே பேட்டியில் அசால்ட் சேது கேரக்டரை ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டது முதல் மகான் பகலவன் கேரக்டரில் நடித்தபோது விக்ரமுக்கு தெரியாமல் சர்ப்ரைஸ் கொடுத்து வரை பல விஷயங்களை பாபி சிம்ஹா ஜாலியாக பேசியுள்ளார். வீடியோ வடிவில் பேட்டியை காண...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்