சென்னை: ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிரின் காஞ்ச்வாலா. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர் இவர். சிபிராஜின் வால்டர், சந்தானம் நடித்த டிக்கிலோனா உட்பட சில படங்களில் இவர் நடித்துள்ளார். தொழிலதிபர் அசார் என்பவரை ஷிரின் காதலித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த 5ம் தேதி மும்பையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதுபற்றி ஷிரின் கூறும்போது, “சில மாதங்களுக்கு முன் அசாரை சந்தித்தேன். என் உறவினரின் நண்பர் அவர். நட்பாகத் தொடங்கிய பழக்கம் காதலானது. அவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன். திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை. இப்போது இயக்குநர் அமீர் படம், விமலின் மஞ்சள் குடை, புகழுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அசார், துபாயில் வாசனை திரவிய தொழில் செய்து வருகிறார்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago