சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ மற்றும் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளூ ஸ்டார்: அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சலூன்: ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இப்போது இயக்கியுள்ள படம், ‘சிங்கப்பூர் சலூன்’. ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார்.
சத்யராஜ், லால்,தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கின்றனர். ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்துக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். நகைச்சுவை பாணியில் உருவான இப்படம் ஜன.25 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago