ரொமான்டிக் காமெடி கதையில் மஹத், ஐஸ்வர்யா தத்தா

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் மஹத் ராகேவந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படத்துக்கு 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரொமான்டிக் காமெடி படமான இதை வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிக்கிறார்.

பிரபுராம். செ இயக்குகிறார். சாக்ஷி அகர்வால், யோபாபு, ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆதவ் சசி, ஆதித்யா கதிர் நடித்துள்ளனர். பாடல்களுக்குத் தரண்குமாரும் பின்னணிக்கு கார்த்திக் கிருஷ்ணனும் இசையமத்துள்ளனர்.

“மஹத் வடசென்னையைச் சேர்ந்தவராக நடித்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்தாலும் சில உணர்ச்சிகரமான தருணங்களும் படத்தில் இருக்கின்றன. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்” என்றது படக்குழு. சமீபத்தில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

மேலும்