சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நட்பு பற்றிய இந்தப் பாடலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றிருந்தனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடல், படத்தின் ஓபனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். "The Greatest of All Time" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (டிச.31) வெளியானது. இந்நிலையில், தற்போது இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
போஸ்டர் எப்படி? - முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்கிறது. ஒரு பைக்கில் மாறுபட்ட வேடங்களில் அமர்ந்திருக்கும் 2 விஜய், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போஸ்டரில் வண்டி ஓட்டும் விஜய்யின் முகம் அசலாகவும், அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் விஜய்யின் முகத்தோற்றம் போலியாகவும் காணப்படுகிறது. பின்னாலிருக்கும் விஜய் வேறொருவரின் முகத்தோற்றத்துடனும் இருப்பது போன்ற அந்த லுக் போஸ்டருக்கான தரத்தை குறைத்துவிட்டது. அவசரமாக உருவாக்கப்பட்டது போன்ற போஸ்டர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago