58 வயதில் 3-வது பட்டம் பெற்று நடிகர் முத்துக்காளை அசத்தல்!

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.Lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது அவரின் 3-வது பட்டம் (degree) என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என கனவு கொண்ட முத்துக்காளை தனது 18-வது வயதில் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வென்றார். இதையடுத்து, சினிமா மீது இருந்த காதலால் தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சென்னை வந்தவர், சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார். தொடர்ந்து 1997-ம் ஆண்டு வெளியான ‘பொன்மனம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும், வடிவேலுவின் நகைச்சுவைக்குழுவில் இடம்பெற்று நகைச்சுவை நடிகராக கவனம் பெற்றார். கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான ‘பேய் இருக்க பயமேன்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார் முத்துக்காளை. இது இவரது மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL NADU OPEN UNIVERSITY) பி.ஏ. வரலாறு படித்தவர் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 58 வயதாகும் இவர் 3 பட்டங்களைப் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்