கதாநாயகி இல்லாத ‘தி பாய்ஸ்’ 

By செய்திப்பிரிவு

‘கஜினிகாந்த்', ‘பொய்க்கால் குதிரை' உட்பட சில படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் அடுத்து இயக்கியுள்ள படத்துக்கு 'தி பாய்ஸ்' என்று தலைப்பு வைத்துள்ளார்.

கதையின் நாயகர்களுள் அவரும் ஒருவராக நடிக்கிறார். ‘ஜெயிலர்' ஹர்ஷத், வினோத், ஷா ரா, யுவராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு அருண் மற்றும் கவுதம் இசையமைத்துள்ளனர். நோவா ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமாரும் சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் டார்க் ரூம் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.

இதன் முதல் தோற்ற போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபுவும் பிரேம்ஜியும் இணைந்து வெளியிட்டுள்ளனர். படம் பற்றி சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறும்போது, “ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகி என்று யாரும் இல்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்