‘அயோத்தி’ முதல் ‘மாமன்னன்’ வரை - 12 தமிழ்ப் படங்கள் @ சென்னை சர்வதேச பட விழா

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியுள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) இன்று (டிச.14) தொடங்கி டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் 12 தமிழ் திரைப்படங்களுடன் 57 நாடுகளைச் சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னை சத்யம் திரையரங்கு மற்றும் அண்ணா திரையரங்கில் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை விழாவில் தொடக்க நிகழ்வு சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்பட விழாவில் ‘அயோத்தி’, ‘அநீதி’, ‘கருமேகங்கள் கலைகின்றன’, ‘விடுதலை பாகம் 1’, ‘போர் தொழில்’, ‘மாமன்னன்’, ‘செம்பி’, ‘உடன்பால்’, ‘ராவணக்கோட்டம்’, ‘சாயாவனம்’, ‘வி3’, ‘ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்’ ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில், தேர்வாகும் முதல் மூன்று படங்களுக்கு முதல் பரிசாக ஏழு லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE