பிறந்தநாளுக்கு வாழ்த்திய ஆளுநர், முதல்வருக்கு ரஜினி நன்றி

By செய்திப்பிரிவு

சென்னை: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியொருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை நேற்று (டிச.12) கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். எக்ஸ் சமூக வலைதளத்தில் #HBDSuperstarRajini | #HBDSuperstar உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்ட்ட் ஆகி வந்தனர். ரஜினியின் பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப் படங்களைத் தந்து உச்ச நட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என்று வாழ்த்தியிருந்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது எக்ஸ் பக்கத்தில், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் தனது மற்றொரு பதிவில், தனக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், ஓபிஎஸ், கமல்ஹாசன், இளையராஜா, ஷாருக்கான் ஆகியோருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்