‘ஆலம்பனா’வில் ஃபேன்டஸி காமெடி

By செய்திப்பிரிவு

சென்னை: வைபவ், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘ஆலம்பனா’. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வழங்கும் இந்தப் படத்தை கொஸ்துப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பாரி கே விஜய் இயக்கியுள்ளார். திண்டுக்கல் லியோனி, பாண்டியராஜன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், காளி வெங்கட் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி வைபவ் கூறும்போது, “ஜெய், பிரேம்ஜி மாதிரி ஆட்களுடன் தொடர்ந்து நடித்துவிட்டேன். இதில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இது ஃபேன்டஸி காமெடி படம். உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவுக்கு காமெடி இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் பாரி கே விஜய் கூறும்போது, “எழுதியதை விட படமாக எடுப்பது கஷ்டம். ஆனால் மகிழ்ச்சியோடு உழைத்து எடுத்துள்ளோம். இந்தப் படத்தில் பூதம் கேரக்டரை யோசித்த போதே முனீஷ்காந்த் மனதில் வந்தார். அந்த கேரக்டரில் அவர் நன்றாக நடித்திருக்கிறார். தாத்தா கேரக்டரில் திண்டுக்கல் லியோனி நடித்திருக்கிறார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ஆக்ஷன் காட்சிகளை குழந்தைகளும் ரசிக்கும்படி தந்துள்ளார்” என்றார். இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்