“ராஜா மியூசிக் இல்ல... ஆனாலும் நாங்க ஹீரோடா!” - கவினின் ‘ஸ்டார்’ பட சிங்கிள் எப்படி? 

By செய்திப்பிரிவு

சென்னை: கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘விருபாக்‌ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் சார்பில் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ‘ஸ்டார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். கதையின் நாயகனாக கவின் நடிக்கிறார்.

மலையாள நடிகர் லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘காலேஜ் சூப்பர்ஸ்டார்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடல் எப்படி? - துள்ளல் இசையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இதனை மதன்கார்க்கி எழுதியுள்ளார். “ராஜா ராஜா மியூசிக் இல்ல ஆனாலும் நாங்க ஸ்டாருடா..’, ‘இன்ட்ரோ யாரும் பாடல ஆனாலும் நாங்க ஹீரோடா’, ‘தோளில் யாரும் தூக்கல, ஆனாலும் ஹீரோடா’ போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன. ஜாலியான ‘வைப்’ பாடலான இப்பாடலில் கவினின் நடனம், உடல்மொழி, எழில் அரசின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்