மாறுபட்ட திரில்லர் படத்தில் இவானா

By செய்திப்பிரிவு

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ள படம், ‘மதிமாறன்’. ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிக்கும் இதில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பவா செல்லதுரை, பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியை, நாயகன் தேடுவதுதான் இதன் கதை. பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் தோற்றம் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. பாபின்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்