ஹைதராபாத்: இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்து புஷ்பா 2, ரெயின்போ படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள இந்தி படமான ‘அனிமல்’ கடந்த 1-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதன் புரமோஷன்களில் கடந்த ஒரு மாதமாகக் கலந்து கொண்ட ராஷ்மிகா, இப்போது 'தி கேர்ள் ஃபிரண்ட்'படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றுள்ளார்.
இதுபற்றி அவர், “மும்பையில் இருந்து ஹைதராபாத் செல்கிறேன். 5ம் தேதி முதல் ‘தி கேர்ள் ஃபிரண்ட்' படத்தின் ஷூட்டிங். அடுத்த 20 நாட்கள் அங்கு இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘தி கேர்ள் ஃபிரண்ட்' படத்தை நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வித்யா, தீரஜ் மொகிலினேனி தயாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
52 mins ago
சினிமா
7 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
3 days ago
சினிமா
2 days ago
சினிமா
3 days ago