கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் கவுதம் கார்த்திக்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் `தக் லைஃப்' படத்தை இயக்குகிறார் மணிரத்னம். `நாயகன்' படத்துக்குப் பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் `தக் லைஃப்' படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய `கடல்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். அவருக்கு இந்தப் படதிலும் மணிரத்னம் வாய்ப்புக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்