ஜக்குவின் பார்வை: ஸ்கெட்ச் படம் எப்படி?

By உதிரன்

மக்கு: என்ன ஜக்கு, 'ஸ்கெட்ச்' படம் பார்த்துட்டு நீ ஒருத்தன் மட்டும்தான் உற்சாகமா வர்ற போல?

ஜக்கு: ஆமாம் மக்கு, நீ வேணும்னா படம் பார்க்குறியா. இப்போ விக்குற டிக்கெட் கட்டணத்தைப் பற்றி கவலைப்படாம நானே டிக்கெட் எடுத்துத் தர்றேன். பார்க்கிங் கட்டணம், ஸ்நாக்ஸுக்கு கூட ஸ்பான்ஸர் பண்றேன் பா.

மக்கு: என் மேல அவ்ளோ காண்டா உனக்கு?

ஜக்கு: பின்னே, நானே எந்திரிக்க முடியாம, இந்த நாளெல்லாம் இப்படி ஆகிடுச்சேன்னு டென்ஷன்ல வந்தா, கலாய்க்குற?

மக்கு: அவ்ளோ அளவுக்கு பண்ணிட்டாங்களாப்பா.. விக்ரம் ஸ்டைலிஷா இருந்தாரு. விஜய் சந்தர் 'வாலு' படத்தை நல்லா எடுத்திருந்தாரேப்பா...

ஜக்கு: ஆமாம், இல்லைன்னு சொல்லலையே.

மக்கு: அப்புறம் என்ன பிரச்சினை?

ஜக்கு: ஒண்ணா, ரெண்டா... பிரச்சினை.... எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா?

மக்கு: இப்போ எதுக்கு 'காக்க காக்க' பாட்டை உன் ஸ்டைலுக்கு மாத்துற?

ஜக்கு: சொன்னா தீராது, சொல்லில் அடங்காது...

மக்கு: சும்மா சினிமா பாட்டையே ரீமிக்ஸ் பண்ணாம விஷயத்து வாப்பா. படம் என்ன பின்னணி?

ஜக்கு: வடசென்னை பற்றிய படம்னு சொல்லிக்கிறாங்க. ஆனா, அதுல அப்படி டீட்டெயில் எதுவும் உண்மையா இல்லைப்பா.

மக்கு: கதை?

ஜக்கு: சேட்டு ஹரிஷ்கிட்ட வேலை செய்றார் அருள்தாஸ். லோனில் கார், பைக் வாங்குறவங்க சரியா தவணைப் பணத்தை கட்டாதவங்க வண்டியை தூக்குறார். ஒரு பிரச்சினை நடக்கும்போது அருள்தாஸ் கையை வெட்டிடறாங்க. அந்த இடத்துக்கு அவர் மச்சான் விக்ரம் வர்றார். இதனால் ஆர்.கே.சுரேஷ் டென்ஷனாகி பழிவாங்குற சந்தர்ப்பத்துக்காகக் காத்துட்டு இருக்கார்.

மக்கு: நல்ல லைன்தான். மேல சொல்லு

ஜக்கு: அப்படி ஒரு முறை வண்டி தூக்கும்போது ஹீரோயின் தமன்னா அறிமுகம் ஆகுறாங்க. தவணைப் பணம் கட்டாததால் பைக்கை தூக்க தமன்னா குரல் உசத்த, விக்ரம் அப்படியே காதல்ல விழுறார்.

மக்கு: என்னப்பா, 'ஜெமினி' படத்துல இதே மாதிரி சீன் வருது. பணம் கட்டாததால ஆட்டோவைத் தூக்குவாங்க, அப்போ சமாதானம் பண்ணப் போகும்போது கிரணைப் பார்ப்பார் விக்ரம்.

ஜக்கு: அதே இங்கே கொஞ்சம் மாறியிருக்கு. அப்புறம் ரவுடிக்கும் கல்லூரிப் பெண் தமன்னாவுக்கும் காதல்.

மக்கு: 'ராஜபாட்டை', 'பீமா'ன்னு நிறைய படத்தோட சாயல் தெரியுதே. சரி, திரைக்கதை எப்படி?

ஜக்கு: எல்லாம் பழைய டைப் தான்பா. இடைவேளையில ஒரு அழுத்தம், கிளைமேக்ஸ்ல ஒரு ட்விஸ்ட்னு ரெண்டு காரணங்களை வைச்சு ரெண்டு மணிநேரத்துக்கு மேல இழுத்தா நாங்கள்லாம் பாவம்ல.

மக்கு: நடிப்பு?

ஜக்கு: விக்ரம் கொஞ்சம் முதிர்ச்சியா தெரியறார். ஆனாலும், எழுந்துபோகாம எல்லாத்தையும் தாங்கிட்டு படம் பார்க்க ஒரே காரணம் அவர்தான். தமன்னாவுக்கு ஓவர் மேக்கப். துருத்தமா நடிக்கிறாங்க. ஆர்.கே.சுரேஷ், ஹரிஷ், பாபுராஜா, வேல ராமமூர்த்தி, கல்லூரி வினோ. விஷ்வந்த், ஸ்ரீமன், பிரியங்கான்னு நிறைய பேர் இருக்காங்க.

மக்கு: என்ன மைனஸ் எகிறுது?

ஜக்கு: சுகுமாரோட கேமரா, தமனோட இசைன்னு பாராட்டதான் ஆசை. ஆனா, முடியல!?

மக்கு: பஞ்ச் வசனம்லாம் இருந்ததே?

ஜக்கு: ஸ்கெட்ச் ஸ்கெட்ச் பண்ணா, ஸ்கெட்ச் மிஸ்ஸே ஆவாது, அப்படி மிஸ் ஆனா மட்டும் சொல்லு பிசிறே இல்லாம செஞ்சு முடிக்கிறேன்.

மக்கு: முதல் வசனத்துக்கும் இரண்டாவது வசனத்துக்கும் லாஜிக் இடிக்கிதே?

ஜக்கு: படத்துலதான் லாஜிக் மிஸ் ஆகணுமா? வசனத்துல மிஸ் ஆகக் கூடாதா?

மக்கு: சுத்தல்ல விடறியேப்பா?

ஜக்கு: சுத்தல்னதும் ஒரு வசனம் ஞாபகம் வருது. ஸ்கெட்ச் யார் வேணும்னாலும் போடலாம், ஆனா, ஸ்கெட்சுக்கே ஸ்கெட்ச் போட முடிய்மா?

மக்கு: தலை சுத்துதுப்பா. விட்டுடு.. காமெடி பற்றி சொல்லு, சூரி இருக்காரே?

ஜக்கு: கியர் வண்டிக்கும் கியர் இல்லாத வண்டிக்கும் என்ன வித்தியாசம்? சம்சாரத்துக்கும் மின்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்?

மக்கு: என்னப்பா ஃபார்வர்டு மெசேஜ்ல வர்றதா பாத்து சொல்ற?

ஜக்கு: இதைத்தான் படத்துலயும் சொல்றாங்க.

மக்கு: மாறாதது

ஜக்கு: ஸ்லோமோஷன் காட்சிகள், வெற்று பில்டப்

மக்கு: மொத்தத்தில் ஸ்கெட்ச்

ஜக்கு: நமக்குதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்