ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள 'மகாவீர் கர்ணா' திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகவுள்ளது.
'துருவ நட்சத்திரம்' மற்றும் 'சாமி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்.
தற்போது 'Ennu Ninte Moideen' மலையாள படத்தின் இயக்குநரான ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
'மகாவீர் கர்ணா' என்ற பெயரில் உருவாகவுள்ள இந்த இந்திப் படம் சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகவுள்ளது. இப்படத்தை நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2019 டிசம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. விக்ரமுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago