'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி 4 நிமிட வசனத்தை ஒரே டேக்கில் பேசியுள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. பிப்ரவரி 2ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகிவிட்டன. முற்றிலும் வித்தியாசமான பாடல்களாக இருக்கின்றன என்ற பாராட்டையும் பெற்றுள்ளன.
படத்தில் விஜய் சேதுபதிக்கு நிறைய கெட்டப்கள் இருக்கும் என்று செய்தி வந்தது. ஆனால் அவை ஒரு பாடலுக்கான கெட்டப்புகள் மட்டுமே என அவர் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது, படத்தின் முக்கியமான காட்சியின் ஒரு பகுதியாக 4 நிமிட நீளமான வசனத்தை ஒரே டேக்கில் விஜய் சேதுபதி பேசி அசத்தியுள்ளதாகவும், இந்த 4 நிமிட வசனம் முழுவதும் திரையரங்கில் கைத்தட்டல் நிச்சயம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர்கள் நீளமான வசனம் பேசி கைத்தட்டல் வாங்குவது தமிழ் சினிமாவில் புதிதில்லை என்றாலும் விஜய் சேதுபதி பேசியிருப்பதாகக் கூறப்படும் 4 நிமிட வசனம் அவருக்கு முதல் முறையே. விஜய் சேதுபதி அடுத்தடுத்து 'சூப்பர் டீலக்ஸ்', '69', 'சீதக்காதி' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago