சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் ‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘ஃபைட் கிளப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் மேல் சட்டை அணியாமல் நிற்கிறார் விஜய் குமார். அவரை சுற்றி 10 பேர் ஃப்ரேமில் நிற்கின்றனர். சிவப்பு மற்றும் கருப்பு நிற பேக்ரவுண்டில் (Background) இந்த போஸ்டர் வெளியாகி உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இந்தப் படம் கேங்ஸ்டர் கதை அம்சம் கொண்ட படமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்தப் படத்தை அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அடுத்த மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago