சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “5 படங்களை இயக்கிய பின் தற்போது என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ‘ஜி ஸ்குவாட்’ (GSquad)-ஐ அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கதைசொல்லலின் புதிய முறைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் இதனை அர்ப்பணித்திருக்கிறேன்.
எனக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் என்னுடைய முதல் சில தயாரிப்புகள் அமையும். இதுவரை எனக்கு நீங்கள் எப்படி ஆதரவளித்தீர்களோ அதேபோல, இந்தப் படைப்புகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என விரும்பி கேட்டுக்கொள்கிறேன். எனது முதல் தயாரிப்பின் அப்டேட்டுக்காக காத்திருங்கள்” என தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்துக்குப் பிறகு, அடுத்ததாக ரஜினியின் ‘ரஜினி171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago