சென்னை: தவறான காவல் நிலையத்தை வழக்கில் சேர்த்து மனுத்தாக்கல் செய்ய, நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல என்று நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன் ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, எதற்காக மனுவை தாக்கல் செய்தீர்கள்? எதற்காக தற்போது திரும்ப பெறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். அப்போது, எதிர் மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ப்பதற்கு பதிலாக, தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்துள்ளதால் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
» வன்முறையும், தந்தை மகன் உறவுச் சிக்கலும் - ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ ட்ரெய்லர் எப்படி?
» ’கங்குவா’ படப்பிடிப்பில் விபத்து - ரோப் கேமரா அறுந்து விழுந்ததால் பரபரப்பு
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி , நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை எனக்கூறி மனுவை வாபஸ் பெற அனுமதியளித்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago