சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர், சிபி. இவர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ அஜித்தின் ’துணிவு’, சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்’ படங்களில் நடித்துள்ளார்.
2018-ம் ஆண்டு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் சிபி ஹீரோவாக நடிக்கும் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிஷ்கின் உதவியாளர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் சிபி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இவருடன் குஷிதா கல்லப்பு, லிஸி கணேஷ், பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ், நிரோஷா உட்பட பலர் நடிக்கின்றனர். கிரவுன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எம்.இப்ராகிம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாபு தமிழ், திரைக்கதை எழுதுகிறார். இவர் வரவேற்பைப் பெற்ற ‘ஜீவி’ படத்துக்கு வசனம் எழுதியவர். கோபி கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கபீர் வாசுகி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 20-ம் தேதி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago